ஜனநாயகத்திற்கான வண்ணத்துப்பூச்சிகள் நாம்

எங்கள் வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் நாட்டின் ‘முதல் குடிமகன்’ பொதுமக்களின் கருத்திற்கு துரோகம் செய்து, தனது அரசியல் எதிரிகள் மற்றும்ஓரினச்செரிக்கையாளர் சமூகத்தை ஒட்டுமொத்தமாக காயப்படுத்தி, அவமானபடுத்தி அவமதிக்கும் நோக்குடன் பாலியல் நோக்குநிலையை இலக்காகக்கொண்ட ‘வண்ணத்துப்பூச்சி’ எனும் பதத்தினை அவரது ஒழிந்து கொண்டிருக்கும் புகழ் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காகபயன்படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு நமது எதிர்ப்பினை தெரிவிக்கவும் சிவில் சமூகத்தின் தொடர்ச்சியான எதிர்ப்பிற்கு ஆதரவாகவும் நாம் இன்று இங்குநிற்கிறோம்.

நாங்கள் அவரது வண்ணத்துப்பூச்சி பேச்சினால் புண்படவில்லை. அதனால் நாம் மேலும் சக்தியடைந்ததாக நாம் உணர்ந்தோம். வண்ணத்துப்பூச்சியானது சமூக மாற்றம், நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் வேறுபாட்டிற்கான ஒரு சின்னம் ஆகும். ஆனால், அவரால் நடத்தபடும் ‘தற்போதைய அரசாங்கத்தில்’ உள்ளஅரசியல்வாதிகளால் ஜனநாயகத்தின் மதிப்பை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு நாங்கள் வருத்தப்படுகிறோம். பொதுமக்களின் வாக்குகள்மூலம் தெரிவு செய்யப்பட்ட அந்த அரசியல்வாதிகள் கோடிக்கணக்கான சலுகைகளுக்காக ஏலத்தில் விற்பனை செய்யக்கூடிய விற்பனை பொருட்களாகமாறிவிட்டதால் நாம் வருந்துகிறோம்..

மனித உரிமைகள் மீறல்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பொது வெளியில் சட்டம் மற்றும் ஜனநாயகத்தை மீறியமுன்னைய அரசாங்கத்தினை தோற்கடிப்பதற்காக எம்மில் பெரும்பான்மையானோர் 2015ல் அவரை ஆதரித்தனர். பொது வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டு, அதே அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சதிசெய்த முந்தைய அரசாங்கத்தின், ஜனநாயக விரோத அரசியல்வாதிகளுடன் மீண்டும் இணைவதற்கான தனதுவெறுக்கத்தக்க நடவடிக்கை, நாம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக அமைவதுடன் அச்செயலை முற்றுமுழுதாக கண்டனம்செய்கிறோம்.

அவர் செய்த துரோகத்தை மறைத்து தன்னைக் காப்பாற்றுவதற்காக ஒரு கவசமாக ஓர்பாலினபீதியை பயன்படுத்தக்கூடாது எனவும், மேலும் அவர் மற்றும் ஏனையபொது பிரதிநிதிகளும் அரசியல் கட்சியும் இலங்கையின் ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் கௌரவத்துடன் சட்டம் மற்றும் நீதி சமத்துவத்துடன் வாழ்வதற்குவழிவகுக்க வேண்டும் என்பதையும் நாம் வலிமையாக நினைவூட்டுகின்றோம்.

மேலும், மிகுந்த அருவெறுப்புடன், இன்றைய சூழலில் வெளிப்படையாகத் தெரிகின்ற செய்தி ஊடகங்களின் அப்பட்டமாக ஒருபக்கச் சார்பான செய்திஅறிக்கையிடுகை மற்றும் அரசியல் குறுக்கீட்டை நாங்கள் கடுமையாக கண்டனம் செய்கிறோம். ஊடகச் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும்.

ஓர்பாலினபீதி என்பது பிரித்தானியர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட விக்டோரியா கால அறநெறியிலான ஒரு ஏகாதிபத்திய கருத்தாகும். நாம் சுதந்திரம்பெற்று தற்போது 70 ஆண்டுகள் ஆகின்றன. அக்காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட ஒப்பந்தம், இன்றைய சூழ்நிலையில் நமது சொந்தஅரசியல்வாதிகளால் தொடரபடுகின்றது. எம்மை மட்டுமல்லாது, அனைத்து சிறுபான்மையினரினதும் உரிமைகளைத் தியாகம் செய்து, இன, மத வெறியின்உருவாக்கம் மற்றும் இனவாத மோதல்களுக்கு செல்வாக்கு செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஜனநாயக விரோத சக்தியை அவர்கள் கைப்பற்ற முடியும் என்றுநம்புகின்றனர் எனின் அவர்கள் பெரும் தவறைச் செயகின்றார்கள்.

நாம், ‘வண்ணத்துப்பூச்சி’ சமூகம் என்ற வகையில், இந்த ஜனநாயக விரோத, அதிகாரப் பசிக் கான சதித்திட்டத்தை கடுமையாக கண்டனம் செய்கிறோம். மனிதஉரிமைகள் ஒரு ஜனநாயக சமூகத்தில் பாதுகாக்கப்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். நாம் ‘வண்ணத்துப்பூச்சிகளாக’ அதைப் பாதுகாப்பதற்காகபோராடுவோம். எவ்வித வன்முறையும் இன்றி, சமத்துவம், சமாதானம், மரியாதை ஆகியவற்றிற்கான வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளின் சத்தத்தின் மூலம்இவ்வுலகை மாற்றலாம். எனவே, ஜனநாயகத்திற்கான வண்ணத்துப்பூச்சிகளாக நாம் இருப்போம். இது சம்பந்தமாக, எமக்கு எதிரான ஒவ்வொரு அவமதிப்பும்தாக்குதலும் எம் போராட்டத்தை தொடர்வதற்கான ஒரு ஊக்குவிப்பு ஆகும்.

ஜனநாயகத்திற்கான வண்ணத்துப்பூச்சிகள்

07 நவம்பர், 2018
லிபர்டி சுற்றுவட்டாரம்