சம்பந்தப்படுவது எப்படி

சம்பந்தப்படுவது எப்படி

உங்களால் பல்வேறு வழிகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

பங்களித்தல்

அனைத்து பங்களிப்புகளும் நிதியாக இருக்கத்தேவையில்லை. நாம் எதிர்ப்பார்க்கும் மாற்றங்களை அடைவதற்கு பல வழிகளில் உங்களால் உதவி செய்ய முடியும். மொழிபெயர்ப்பு, அச்சு வேலை, ஆவணப்படுத்தல், அன்றாட நிர்வாக வேலைக்கான உதவி, “கொழும்பு பிரைற்” (COLOMBO PRIDE)”( நாம் ஒவ்வொரு வருடமும் நடாத்தும் பல நிகழ்வுகளிற்கு அதிகமான உதவி தேவையாய் உள்ளது) இன் போதான உதவி, உடனடி அலைப்பு (Hotline) ஆலோசனை வழங்குதல் போன்றவற்றிக்காகவும் இன்னும் பல்வேறு வழிகளில் உங்கள் நேரத்தை வழங்குவதினூடக தொண்டர் அடிப்படையில் உதவி வழங்க முடியும். நாம் உள்ளக பயிலுநர்களை (Intern) வரவேற்கிறோம் – எங்களிடத்தில் பரந்த அளவிலான பல்வேறுபட்ட திட்டங்கள் காணப்படுகிறது அவற்றிட்கு புத்திகூர்மையானதும் கடின உழைப்பும் உடைய நபர்கள் தேவைப்படுகிறார்கள் இன்னும் எமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு அவர்களின் உதவியும் தேவைப்படுகிறது. பிற நாடுகளில் இருந்தும் தொண்டர்கள் மற்றும் உள்ளக பயிலுநர்களை வரவேற்கிறோம்!

தொண்டாற்றல்

எமக்கு தொண்டர்களின் உதவி தேவை! இலங்கையில் LGBTIQ உரிமையை முன்னெடுக்கும் செயற்பாட்டில் உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை தொண்டராக பயன்படுத்த விரும்பினால் எம்மை தொலைபேசியினூடாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

புத்தகங்கள் மற்றும் வீடியோக்கள் – நாம் LGBTIQ மற்றும் மனித உரிமைகள் தொடர்பான வெளியீடுகளிற்கான பங்களிப்புகளை வரவேற்கிறோம்.

வெளியீடுகள் மற்றும் ஆக்கங்கள்:

எமது காலாண்டு செய்திமடல்/சஞ்சிகை ரெயின்போ(Rainbow) செய்திகளிற்கு பங்களிப்பு வழங்குமாறு எழுத்தாளர்களை(writers) ஊக்குவிக்கிறோம். ரெயின்போ செய்திகள் இப்போது சஞ்சிகையுடன் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றமையினால் பரந்த அளவிலான உலகம் முழுவதும் வாசகர்களை சென்றடைகிறது.

ஈகுவல் கிரௌன்ட் (EQUAL GROUND)ஆனது அதனுடைய சரித்திர சுவடிக்கூடம் தயாரித்தல் போன்றே LGBTIG பிரச்சினைகளை பெரும்போக்காக்கல் மற்றும் அநீதி, பாகுபாடு, வெறுப்புகளை கவனத்திற்கு கொண்டுவருதலிற்கான தனது முயற்சிக்கு உதவும் வகையில் வாதிடும் ஆவணங்களை தயார் செய்வதற்கு உதவ இளம், திறமையான ஆவணப்படம் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கிறது.

நாம் LGBTIQ மற்றும் மனித உரிமைகள் தொடர்பான வெளியீடுகள்/ புத்தகங்கள் அத்துடன் LGBTIQ நாவல்கள், கவிதைகள், சுயசரிதைகள் முதலியனவற்றிற்கான பங்களிப்பினை வரவேற்கிறோம்.

ஆபாசம் என கருதுபவைகளை நாம் ஏற்றுக்கொள்வதில்லை ஏனெனில் அது இலங்கையின் தற்போதைய சட்டத்திற்கு முரணானதாகும். உங்கள் புரிதல் மற்றும் ஒத்துழைப்பிற்கு நன்றி.

ஈகுவல் கிரௌன்ட் (EQUAL GROUND)இற்கு பங்களிப்பு செய்ய, தொலைபேசி, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளவும்.

நன்கொடை

உங்களது நிதிப் பங்களிப்பு நிச்சயமாக மிகவும் வரவேற்கத்தக்கது. நன்கொடையானது எமது நிறுவனம் மற்றும் எமது பாதுகாப்பான இடத்ததை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவுகிறது.
இப்போது நீங்கள் “பேபல்”(PayPal) முறையினூடாகவோ அல்லது இலங்கை ரூபா, யுரோ, அமரிக்க டாலர்கள், ஆஸ்திரேலிய டாலர்கள் மற்றும் ஸ்டெர்லிங் (இங்கிலாந்து) பவுண்டுகளினாலான ஒரு காசோலையை அனுப்புவதன் மூலமும் உங்களது பங்களிப்பினை மேற்கொள்ள முடியும். மற்றய நாணயங்களும் ஏற்றுக்கொள்ளப்படலாம்; உங்களது காசோலையை அனுப்புவதற்கு முன்னர் எங்களுடன் சரிபார்த்துக்கொள்ளவும். எமது முகவரிக்கு தபால் மூலம் அனப்பிவைக்க முடியும்.