ம.வி.மு (பா.உ) நலிந்த ஜயதிஸ்ஸ சமபாலீர்ப்பு மீது கொண்ட வெறுப்புணர்வு

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் ஓர் நேர்காணலில் ‘‘நான் முற்றிலும் சமபாலீர்ப்பினர் , ஈரர் மற்றும் திருநர் ஆகியோரின் உரிமைகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் .இது ஒரு மானிடத்தேவை அன்று , இது வருங்கால சந்ததி உருவாக்கத்திற்கு பாதகமாக அமையும் . விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறிந்த விடயம் என்னவென்றால் இவ்வாறான உணர்வுகள் ஏற்படுவது என்பது கடின மன அழுத்தத்தினால் ஆகும் .மனித மனம் கடுமையான மனஅழுத்தத்திற்கு அல்லது அவ்வாறான சூழ்நிலையில் வாழும் போது இவ்வகையான அசாதாரண உணர்வுகள் ஏற்படுகின்றது . உதாரணமாக மனிதர் காட்டில் வாழ்ந்த போது இவ்வகையான நடத்தை காணப்படவில்லை சிறையில் அடைக்கப்படும் போது இவை அவதானிக்கப்படலாம் .நான் ஆண் , பெண் இடையிலான திருமணத்தையே நம்புகின்றேன் .சம பாலீர்ப்பு திருமணங்கள் அசாதாரணமானவையாகவே கருதுகின்றேன். இது மனித பரிமாண வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தும்’‘ என்று தெரிவித்திருந்தார்.

இது இடது சாரிக்கட்சியாக தம்மை அடையாளப்படுத்திகாட்டிக்கொள்ளும் இலங்கையின் மக்களின் சமத்துவத்திற்காக எப்போதும் குரல் கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை உருவமா ? ஈகுவல் க்ரவுண்ட்ஸ் ( Equal ground) அமைப்பு வைத்தியர் ஜயதிஸ்ஸவின் இந்த வெறுப்புணர்வு கொண்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு இந்தக்கூற்றுத்தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்து என்ன என்பதனை இலங்கையின் சமபாலீர்பினர் ,ஈரர் ,திருநர், இடையிலிங்கத்தோர் மற்றும் பாலீர்ப்பு தொடர்பில் கேள்விகளுடன் வாழ்வோர் சார்பில் கேட்டு அதற்கான பதிலை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

Continue reading this…

Find peace of mind: free counseling service for LGBTIQ persons

LEARN MORE

சர்வதேச மகளிர் தினம் 2015

இந்த வருடம் ஈக்குவல் கிறவுண்ட் நிறுவனமானது சர்வதேச மகளிர் தினத்தை நுவரேலியா (பெப்ரவரி 20), புத்தளம் (மார்ச் 01), கொழும்பு (மார்ச் 05) மற்றும் மாத்தறை (மார்ச் 07) ஆகிய இடங்களில் கொண்டாடுகிறது.

Continue reading this…

மன்னிப்பு கோரல்

அது ஒரு துரதிருஷ்டவசமான இருபாலின சேர்க்கை என்ற அறிக்கை ”நாம் யார்?” என்ற தலைப்பின் கீழ் எங்கள் ரெயின்போ செய்தியில் டிசம்பர் 2014 இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம். இது LGBTIQ சமூகத்தின் சில நபர்களுக்கு வலியை ஏற்படுத்தும் விதமாக இது அமைந்ததால் எங்கள் முழுமனதுடன் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். எங்கள் பத்திரிகை பயனுள்ளதாகவும், உண்மையுள்ளதாகவும் இருக்கும் படி முயர்ச்சிக்கும் வேளை எங்கள் கவன குறைவால் இப்படியான பிழைகள் ஏற்படுகின்றன.ஈக்வல் கிறவுண்ட் இந்த கேள்விகளுக்கு உடன்படவில்லை. நாங்கள் வினியோகித்த அனைத்து ரெயின்போவின் நகல்களில் இருந்து இந்த அறிக்கையை நீக்க நடவடிக்கை எடுப்போம்.

Continue reading this…

பால்நிலை மாற்றம் செய்து கொண்டவர்ளுக்கான தின நிகழ்வூ

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி பால்நிலை மாற்றம் செய்து கொண்டவர்களுக்கான தினம் அனுடிக்கப்படுகின்றது. அந்த தினத்தை கொண்டாடும் முகமாக இந்த வருடமும் EQUALGROUND நிறுவனத்தினால் நிகழ்வொன்று கொழும்பு ஜெர்மனி கலாசார நிலையத்தில் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சிறப்பான வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வூ மாலை 6.30இற்கு ஆரம்பித்தது. இந்த நிகழ்வில் விசேட அதிதியாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி வைட்டிங் மற்றும் வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களும் துணைத் தூதுவர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களும் ஓரினச் சேர்க்கையாளர்களும் பால் மாற்றம் செய்து கொண்ட நபர்களும் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரும் மகிழ்வூடன் வரவேற்கப்பட்டதுடன் EQUALGROUND நிறுவனம் மற்றும் பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபர்களை பிரதிநிதித்துவம் செய்து EQUALGROUND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோசானா ஃபிளேமர் கல்தேரா அவர்கள் ஆங்கில மொழியிலும் EQUALGROUND நிறுவனத்தின் செயற்பாட்டாளரும் பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபருமான பூமி ஹரேந்திரன் அவர்கள் தமிழ் மொழியிலும் ரசிக வல்கம அவர்கள் சிங்கள மொழியிலும் வரவேற்புரை ஆற்றினர். பாரபட்சமாக நடத்துதல் வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவத்திற்காக போராடி உயிரிழந்த பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபர்களுக்காக அனைவரும் எழுந்திருந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இலங்கையில் வசிக்கும் பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபர்களுக்கு நேர்ந்த வன்முறை தொடர்பில் சூழ்நிலை பகுப்பாய்வினை சமர்ப்பித்து தமித் சந்திமால் அவர்கள் சிறு உரையொன்றினை ஆற்றினார். அவ்வாறே பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபர்கள் உண்மையாக எதிர்கொள்ளும் நிகழ்வூ மற்றும் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் சார்ந்து EQUALGROUND நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஆவணத் திரைப்படத்தின் இரண்டு நிமிட முன்னோட்ட காட்சியூம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வின் மிகவூம் முக்கியமான அங்கமாக பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நாடகமும் அரங்கேற்றப்பட்டது. வருகை தந்த நபர்கள் இந்த சந்தர்ப்பத்தில் மிகவூம் மகிழ்ச்சியடைந்ததுடன் அவர்களின் அரங்கு நிறைந்த கரகோம் இதற்கு ஆதாரமாக இருந்தது. மேடை நாடகம் நிறைவூ பெற்றதும்இ அவர்களது பிரதிபலிப்பும் நிகழ்வை வர்ணமயமாக்கியது. நிஹால் சேனாரத்ன அவர்களால் எழுதப்பட்டு EQUALGROUND நிறுவன செயற்பாட்டாளர்களான மேனகா போதிய பந்து அவர்களினால் இயக்கப்பட்ட இந்த மேடை நாடகத்தில் EQUALGROUND நிறுவன ஊழியர்கள் மற்றும் தன்னார்வ ஊயழிர்கள் பங்குபற்றினர். 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நாடகம் நிறைவடைந்ததும்இ தேநீர் விருந்துபசாரமும் நடைபெற்றது.

Continue reading this…