ம.வி.மு (பா.உ) நலிந்த ஜயதிஸ்ஸ சமபாலீர்ப்பு மீது கொண்ட வெறுப்புணர்வு

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் ஓர் நேர்காணலில் ‘‘நான் முற்றிலும் சமபாலீர்ப்பினர் , ஈரர் மற்றும் திருநர் ஆகியோரின் உரிமைகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் .இது ஒரு மானிடத்தேவை அன்று , இது வருங்கால சந்ததி உருவாக்கத்திற்கு பாதகமாக அமையும் . விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறிந்த விடயம் என்னவென்றால் இவ்வாறான உணர்வுகள் ஏற்படுவது என்பது கடின மன அழுத்தத்தினால் ஆகும் .மனித மனம் கடுமையான மனஅழுத்தத்திற்கு அல்லது அவ்வாறான சூழ்நிலையில் வாழும் போது இவ்வகையான அசாதாரண உணர்வுகள் ஏற்படுகின்றது . உதாரணமாக மனிதர் காட்டில் வாழ்ந்த போது இவ்வகையான நடத்தை காணப்படவில்லை சிறையில் அடைக்கப்படும் போது இவை அவதானிக்கப்படலாம் .நான் ஆண் , பெண் இடையிலான திருமணத்தையே நம்புகின்றேன் .சம பாலீர்ப்பு திருமணங்கள் அசாதாரணமானவையாகவே கருதுகின்றேன். இது மனித பரிமாண வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தும்’‘ என்று தெரிவித்திருந்தார்.

இது இடது சாரிக்கட்சியாக தம்மை அடையாளப்படுத்திகாட்டிக்கொள்ளும் இலங்கையின் மக்களின் சமத்துவத்திற்காக எப்போதும் குரல் கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை உருவமா ? ஈகுவல் க்ரவுண்ட்ஸ் ( Equal ground) அமைப்பு வைத்தியர் ஜயதிஸ்ஸவின் இந்த வெறுப்புணர்வு கொண்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு இந்தக்கூற்றுத்தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்து என்ன என்பதனை இலங்கையின் சமபாலீர்பினர் ,ஈரர் ,திருநர், இடையிலிங்கத்தோர் மற்றும் பாலீர்ப்பு தொடர்பில் கேள்விகளுடன் வாழ்வோர் சார்பில் கேட்டு அதற்கான பதிலை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

Continue reading this…

Find peace of mind: free counseling service for LGBTIQ persons

LEARN MORE

பால்நிலை மாற்றம் செய்து கொண்டவர்ளுக்கான தின நிகழ்வூ

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி பால்நிலை மாற்றம் செய்து கொண்டவர்களுக்கான தினம் அனுடிக்கப்படுகின்றது. அந்த தினத்தை கொண்டாடும் முகமாக இந்த வருடமும் EQUALGROUND நிறுவனத்தினால் நிகழ்வொன்று கொழும்பு ஜெர்மனி கலாசார நிலையத்தில் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சிறப்பான வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வூ மாலை 6.30இற்கு ஆரம்பித்தது. இந்த நிகழ்வில் விசேட அதிதியாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி வைட்டிங் மற்றும் வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களும் துணைத் தூதுவர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களும் ஓரினச் சேர்க்கையாளர்களும் பால் மாற்றம் செய்து கொண்ட நபர்களும் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரும் மகிழ்வூடன் வரவேற்கப்பட்டதுடன் EQUALGROUND நிறுவனம் மற்றும் பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபர்களை பிரதிநிதித்துவம் செய்து EQUALGROUND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோசானா ஃபிளேமர் கல்தேரா அவர்கள் ஆங்கில மொழியிலும் EQUALGROUND நிறுவனத்தின் செயற்பாட்டாளரும் பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபருமான பூமி ஹரேந்திரன் அவர்கள் தமிழ் மொழியிலும் ரசிக வல்கம அவர்கள் சிங்கள மொழியிலும் வரவேற்புரை ஆற்றினர். பாரபட்சமாக நடத்துதல் வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவத்திற்காக போராடி உயிரிழந்த பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபர்களுக்காக அனைவரும் எழுந்திருந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இலங்கையில் வசிக்கும் பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபர்களுக்கு நேர்ந்த வன்முறை தொடர்பில் சூழ்நிலை பகுப்பாய்வினை சமர்ப்பித்து தமித் சந்திமால் அவர்கள் சிறு உரையொன்றினை ஆற்றினார். அவ்வாறே பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபர்கள் உண்மையாக எதிர்கொள்ளும் நிகழ்வூ மற்றும் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் சார்ந்து EQUALGROUND நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஆவணத் திரைப்படத்தின் இரண்டு நிமிட முன்னோட்ட காட்சியூம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வின் மிகவூம் முக்கியமான அங்கமாக பால்நிலை மாற்றம் செய்து கொண்ட நபர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நாடகமும் அரங்கேற்றப்பட்டது. வருகை தந்த நபர்கள் இந்த சந்தர்ப்பத்தில் மிகவூம் மகிழ்ச்சியடைந்ததுடன் அவர்களின் அரங்கு நிறைந்த கரகோம் இதற்கு ஆதாரமாக இருந்தது. மேடை நாடகம் நிறைவூ பெற்றதும்இ அவர்களது பிரதிபலிப்பும் நிகழ்வை வர்ணமயமாக்கியது. நிஹால் சேனாரத்ன அவர்களால் எழுதப்பட்டு EQUALGROUND நிறுவன செயற்பாட்டாளர்களான மேனகா போதிய பந்து அவர்களினால் இயக்கப்பட்ட இந்த மேடை நாடகத்தில் EQUALGROUND நிறுவன ஊழியர்கள் மற்றும் தன்னார்வ ஊயழிர்கள் பங்குபற்றினர். 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நாடகம் நிறைவடைந்ததும்இ தேநீர் விருந்துபசாரமும் நடைபெற்றது.

Continue reading this…

ஊடக அறிக்கை

கொழும்பு 15, ஒக்டோபர் 2014: இலங்கையின் LGBTIQ சமுதாயத்திற்கு ஐ.நாவிடமிருந்து இறுதியில் நல்ல செய்தி கிடைத்துள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 12ஆவது உறுப்புரைக்கு அமைய “பாலியல் அமைப்பு மற்றும் பால்நிலை அடையாளம் (SOGI) என்பன பாதுகாக்கப்படுவதாக, ICCPR இற்கான (சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனம்) இலங்கையை மீளாய்வு செய்யும் நிபுணத்துவ குழுவுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை அரசாங்கமானது அறிவித்துள்ளது.”

முன்னர், பாலியல் அமைப்பு மற்றும் பால்நிலை அடையாள விடயங்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் நிபுணர்கள் குழு கோரியிருந்தது. நிபுணர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயப்பட்டியலில் ஐந்தாவது பந்தியில் பின்வரும் குறிப்பிடப்பட்டிருந்தது:

“பாலியல் அமைப்பு மற்றும் பால்நிலை சமத்துவத்தின் அடிப்படையில் களங்கப்படுத்தல் மற்றும் பாரபட்சத்திற்கு ஆளாகும் நபர்களை பாதுகாப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை தயை செய்து குறிப்பிடுங்கள். அத்துடன், பாரபட்சமின்மை எனப்படும் அரசியலமைப்பு ஏற்பாடுகளின் ஊடாக அவை பாதுகாக்கப்படுகின்றதா என்பதனையும் குறிப்பிடுங்கள்.”

பாதுகாப்பு தொடர்பில் பதிலளிக்காத இலங்கை அரசாங்கமானது: “இனம், மதம், மொழி, சாதிM பால், அரசியல் கருத்துக்கள், பிறந்த இடம் அல்லது அடிப்படை உரிமை என்ற வேறு எந்த அடிப்படையிலும் பாரபட்சமின்மையை அரசியலமைப்பின் 12ஆவது உறுப்புரை குறிக்கின்றது. இந்த ஏற்பாடானது பாலியல் அமைப்பு மற்றும் பால்நிலை அடையாளங்களின் அடிப்படையில் களங்கப்படுத்தல் மற்றும் பாரபட்சமாக நடத்தலில் இருந்து நபர்களை பாதுகாக்கின்றது” என பதிலளித்துள்ளது.

OHCHR இணையத்தளத்pதல் முழு அறிக்கையினையும் பார்க்கலாம் – website – CCPR/C/LKA/5, பந்தி. 339.

இந்த அறிக்கையின் அடிப்படையில், 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் ஜெனீவா OHCRஇல் நடைபெற்ற மீளாய்வின் போது, பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்திடம் வினவப்பட்டது:

(அ) SOGIஇனை உள்ளடக்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 12ஆவது உறுப்புரையில் எத்தகைய திருத்தங்களை இலங்கை அரசாங்க முன்னெடுத்துள்ளது?

(ஆ) ஓரினச்சேர்க்கையை ஏன் அரசாங்கம் குற்றமற்றதாக்கவில்லை?

(இ) இலங்கையில் LGBTI நபர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான முயற்சிகளை எடுத்துள்ளது?

இதற்கு பதிலளிக்கும் வகையில், சட்டமாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் நாயகமான Ms. பிம்பா ஜயசிங்க திலக்கரட்ன அவர்கள் பின்வரும் அவதானிப்புக்களை முன்வைத்தார்:

“பாலியல் அமைப்பு மற்றும் பால்நிலை அடையாளத்திற்கான சமத்துவத்தை உறுப்புரை 12.1 உறுதி செய்கின்றது”

“பாலியல் அமைப்பு மற்றும் பால்நிலை அடையாளத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதற்கு அரசியலமைப்புக்கு முரணானது என உறுப்புரை 12.2 சட்டம் குறிக்கின்றது”

“குற்றவியல் கோவையின் 365 மற்றும் 365 அ பிரிவுகள்ää எந்தவொரு குழுவையும் இலக்கு வைக்கவில்லை. ஆனால்ää பொது ஒழுங்கினை காப்பதற்காக உள்ளது.”

முன்வைக்கப்பட்ட கேள்விக்கு இலங்கையானது நேரடியாக பதிலளிக்காத போதிலும், மேலதிக சொலிசிட்டர் நாயகத்தினால் அளிக்கப்பட்ட பதிலினை சாதகமான பிரதிபலிப்பாக கருத முடியும்.
இது தொடர்பில் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் முன்வைக்கும் கருத்தாக இருப்பது: “இந்த விளைவு குறித்து நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன், இலங்கையில் SOGI தொடர்பில் அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கான உரைவிளக்கங்களை தெளிவுபடுத்தியமைக்காக அரசாங்கத்தினை பாராட்டுகின்றோம். இது LGBTIQ சமூகத்திற்கு பெரும் மாற்றத்தை கொண்டு வராத போதிலும், ஆகக் குறைந்தது, இலங்கையில் மாற்றம் ஏற்படுகின்றது என்ற உணர்வை உருவாக்குகின்றது. அத்துடன், எதிர்காலத்தில் LGBTIQ சமூகத்தினர் சற்று சிரம் உயர்த்தி செல்ல முடியும் என்ற நம்பிக்கையை தருகின்றது. LGBTIQ சமூகத்துடன், குறிப்பாக இந்த நாட்டில் LGBTIQ தனிநபர்களுக்காக சிறப்பாக நடத்துதல் மற்றும் சமத்துவத்திற்காக ஆதரவு நாடுபவர்களுடன் பகிரங்க உரையாடலை ஆரம்பிக்குமாறும், எமது சமுதாயத்தினரை காக்கும் பாரபட்சமற்ற சட்டங்கள் மற்றும் நியதிச்சட்டங்களை அமுல்படுத்துமாறும் நாம் அரசாங்கத்தினை வலியுறுத்துகின்றோம்.”

Continue reading this…

எமது புதிய தோற்றத்திற்கு உங்களை வரவேற்கிறோம்!

ஈகுவல் கிரௌன்ட்(EQUALGROUND) புதிய இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நீண்ட இடைவெளியின்றி எமது இணையத்தளம் செயற்படவேண்டும் என்பதற்காக விடயங்களைப் பெற்று குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் தாமதமாகுதற்காக வருந்துகிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி கூறுவதுடன் காத்திருந்மைக்கு பெறுமதி இருக்கும் எனவும் நாம் நம்புகிறோம்!

மேம்படுத்தப்பட்ட புதிய இணையத்தளமானது இயக்குவதற்கு இளகுவாகவும் நேரத்துக்கு நேரம் புதுப்பிக்கப்பட்டும், செய்திகள், கட்டுரைகள் போன்றன செறிந்ததாகவும் இருக்கும். ஆம்!! அது முன்னயது போன்றே மும்மொழியிலும் காணப்படும்.

இந்த வருடம் நாம் 10 வது கொழும்பு பிரைட் (Colombo PRIDE) மற்றும் ஈகுவல் கிரௌன்ட் (Equal Ground) 10 வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறோம். இந்த மைல்கற்களை நினைத்து நாம் மிகவும் பெருமையடைகிறோம்!

ஆண்டுகள் முடிவின் விளிம்பில் இருக்கும் தருணத்தில், நாம் இலங்கையில் காணப்படும் அனைத்து பால்நிலை அடையாளம் மற்றும் பாலியல் நடத்தைகளிற்கு சம உரிமையை வழங்குவதற்காக எம்மை புதுப்பித்து ஓருபோதும் இல்லாத வாறு கடுமையாக உழைப்பதற்கு எதிர்ப்பார்க்கிறோம்.

Continue reading this…